மே 11 ஆம் தேதி பாடசாலைகளின் இரண்டாம் தவணையைத் தொடங்க முடியாது


மே 11 ஆம் தேதி பாடசாலைகளின் இரண்டாம் தவணையைத் தொடங்க முடியாது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.

பரீட்சையைப் பொறுத்தவரையில் இரு தெரிவுகள் உள்ளன. ஒன்று பரீட்சையை ஒத்திவைப்பது,  இரண்டாவது குறிப்பிட்ட பாட அலகுகளை மட்டுமே உள்ளடக்கிய வகையில் பரீட்சையை நடாத்துவது.

இருப்பினும், இது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பிரதமர் கூறினார்.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என கல்வி அமைச்சில் பேசவல்ல அதிகாரிகள்  உறுதிப்படுத்தினர்

No comments:

Post a Comment