தனியார் கல்வி நிலையங்கள் ஆரம்பிக்கும் திகதிகளில் முடிவை மாற்றிய அரசாங்கம்!


தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் பிரத்தியேக வகுப்புகளுக்கு ஜூன் 29ஆம் திகதி தொடக்கமே அனுமதி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

ஒரு வகுப்பறையில் 100 மாணவர்கள் என்ற கட்டுப்பாட்டுடன் கல்வி செயற்பாடுகளை ஜூன் 15 முதல் நடத்த அனுமதி தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களத்தால் நேற்று மாலை அறிவிக்கப்பட்டது.

ஒரே தடவையில் 100 மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாத வகுப்பறைகளில் , சமூக இடைவௌியுடன் இணைத்துக்கொள்ளக்கூடிய அதிகபட்ச மாணவர்களை மாத்திரமே அமர்த்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் தனியார் வகுப்புக்களை ஆரம்பிக்கும் அனுமதி ஜூன் 15 முதல் அல்ல என்றும் ஜூன் 29ஆம் திகதி அதன் தொடக்கமாகும் எனவும் அரச தகவல் திணைக்களம் நேற்றிரவு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment