தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மதிப்பீட்டு பணிகள் இன்று!


 


நடைபெற்று முடிந்த 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று தொடக்கம் ஆரம்பமாகவுள்ளதென, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் கம்பஹா மாவட்டம் மற்றும் குளியாப்பிட்டிய ஆகிய கல்வி வலயங்களில், பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படாதென்றும் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இப்பணிகள் இன்று தொடக்கம் 27ஆம் திகதி வரை, 39 மதிப்பீட்டு மத்திய நிலையங்கள், 391 மதிப்பீட்டு சபைகளிலும் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Get in Touch With Us to Know More
Like us on Facebook




No comments:

Post a Comment