ஆபத்தான வலயங்களை தவிர அனைத்து மாவட்டங்களிலும் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் இதில் பாரிய ஆபத்து இருப்பதாக அகில இலங்கை மாவட்டப் பாடசாலை போக்குவரத்துச் சேவை சங்கத்தின் தலைவர் என்.எல்.கே. ஹரிச்சந்திர பத்மசிறி தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் பரிந்துரையின் அடிப்படையில் போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எமக்கு தேவையான சுகாதார நடைமுறைகளை வழங்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவை கிடைக்கப்பெற்ற பின்னர் சேவையை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !


No comments:
Post a Comment