2020/2021 கல்வி ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் இன்று 21ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த வருட உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக மாணவர்கள் இதற்கான விண்ணப்பங்களை ஒன்லைன் ஊடாக ஆணைக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
..
மாணவர்களினால் பூர்த்தி செய்யப்படும் விண்ணங்களை புகைப்படபிரதி செய்து அதில் கையெழுத்திட்டு உறுதி செய்து அதனை apply2020ShUGC.ac.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டல் நூலை மாணவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !


No comments:
Post a Comment