கல்வி அமைச்சு எடுத்துள்ள விசேட நடவடிக்கை!



 அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் டிஜிட்டல் கொள்கைக்கு அமைய எக்ஸாம் ஸ்ரீலங்கா என்ற பெயரிலான தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செயலியை பயன்படுத்தி வீட்டில் இருந்தவாறே கைத்தொலைபேசி மூலம் பரீட்சைகள் திணைக்களத்தின் சேவைகளை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும்  சான்றிதழ்களை உறுதிப்படுத்துதல் பெறுபேறுகளை உறுதிப்படுத்தல் உட்பட பல்வேறு சேவைகளையும் இந்த செயலியின் ஊடாக பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு மக்களுக்கு கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.


Get in Touch With Us to Know More
Like us on Facebook









No comments:

Post a Comment